என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடிகர் விஜய்"
- தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
- விஜய் தங்குவதற்கு ஏற்ப விஐபி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்றுரவு கட்சி தலைவர் விஜய் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் வாடகை வீட்டில் தங்க இருப்பதாகவும், அந்த வீட்டிற்கு நிர்வாகிகள் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு வந்து மாநாட்டின் பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது. மேஞம், விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவதரப்பட்டுள்ளது.
தங்கும் இடத்தில் இருந்து கேரவன் மூலம் மாநாடு திடலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார்.
- விஜய் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் மாநாட்டில் கலந்துகொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது. அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனது 69 படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுவே விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரியில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார். விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ள இந்த மாநாடு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.
இந்த மாநாடு விஜய்யின் அரசியல் எழுச்சிக்குத் துவக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. எனவே விஜய் மாநாட்டுக்கு எல்லா தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்துகொண்டிருக்கிறது. விஜய் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் மாநாட்டில் கலந்துகொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் மாநாடு சிறக்க வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, அண்ணா @actorvijay உங்களின் முன்னாள் உள்ள நீண்ட நெடிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் எல்லோருக்கும் நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் #TheGreatestOfAllTime என்று கூறியுள்ளார்.
Anna @actorvijay wishing you all the best for the massive journey ahead! You've always been an inspiration to us all. Here's a little something from us to you. @tvkvijayhq #TheGreatestOfAllTime pic.twitter.com/3ywpJtyMUm
— venkat prabhu (@vp_offl) October 24, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை காணொலி காட்சி வாயிலாக விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவ்வப்போது பணிகளை விஜய் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர் கண்காணிப்பில் உள்ள விஜய் அவ்வப்போது மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றும் கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்றாதபடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா சிறப்பு வழிபாடு செய்தனர்.
- கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா ஆகியோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தவெக மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
- மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.
அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெற்றிப்பெற வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்யின் சொந்த கோவிலான கொரட்டூர் சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.
- கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.
- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற லியோ வெளியாகி இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்துள்ளது
இந்த ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, தி கிரானிகல்ஸ் ஆகஃப் லியோ[The Chronicles Of Leo] என்ற தலைப்பில் அப்டேட் ஒன்றை செவன் ஸ்க்ரீன் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அல்லது BTS எனப்படும் படப்பிடிப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள் குறித்த சிறப்புத் தொகுப்பு வெளியிடப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team Leo, this one's for you, who poured their hearts into making #Leo the highest grossing Tamil film of 2023 ??Join us at 12 PM for #TheChroniclesOfLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @SonyMusicSouth pic.twitter.com/ipoglVzCGV
— Seven Screen Studio (@7screenstudio) October 19, 2024
சில தீவிர ரசிகர்கள் இது லியோ 2 படத்துக்கான அப்டேட் ஆக இருக்குமோ என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே லியோ படம் ஓராண்டு நிறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
So many learnings, so many memories, so many exciting moments ❤️The film that will always stay close to my heart, #Leo ?? Love you so much @actorvijay na for making it happen ??❤️Eternally grateful to all the people who have spent their sweat and blood for this film,… pic.twitter.com/nbcaKz1ptR
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 19, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது.
- ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது. தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " போன் செய்து கோட் படத்தை அன்புடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா. முழு மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றி" எனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸான போது விஜய்யும் வெங்கட் பிரபுவும் திரையரங்கில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
- ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.
இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
- விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.
சென்னை:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.
மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளின் கடிதம் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மூலமாக புஸ்சி ஆனந்திடம் வழங்கப்பட்டது. மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்பட 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர்.
இந்த 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் நடிகர் விஜய் கட்சி தரப்பில் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
போலீசாரின் 21 கேள்விகள் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்துவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரின் 21 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பான போலீசாரின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்க கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இட வசதி பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் மேடை அரங்கு எத்தனை சதுர அடி நீளம் அகலத்தில் அமைகிறது என்ற விவரம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேடை அமைக்கப்படும் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களுக்கு எந்தெந்த இடங்களில் எப்படி உணவு வழங்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தொகுதி தொண்டர்கள் வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் நிறுத்துவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் உள்ள ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வருவார்கள் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் விளக்கமான பதில்களை அளித்துள்ளார்.
இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து 21 விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை கொடுத்தார்.
விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் விக்கிரவாண்டி அருகே மாநாடு நடக்கும் இடத்துக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.
அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநாட்டுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துட னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
- தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
- மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி நல திட்டங்களோடு கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர்.
அம்பத்தூரில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடியை வழங்கினர்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கி மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.
- 'தி கோட்' திரைப்படம் நாளை மறு நாள் (5-ந்தேதி) வெளியாகிறது.
- விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை மறுநாள் (5-ந்தேதி) வெளியாகிறது.
விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த படத்தை வரவேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.
ஆனால் தியேட்டர்களில் விஜய் பட பேனர்களை வைப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதுமே புதிய படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பேனர் மற்றும் கட்-அவுட்களை படம் வெளியாகும் நாளில் வைத்து அழகு பார்ப்பார்கள்.
பின்னர் அந்த பேனர்கள் அகற்றப்பட்டு விடும். இதுபோன்றே விஜய் ரசிகர்களும் பேனர் வைப்பதற்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் தியேட்டர்களில் பேனர் மற்றும் கட்-அவுட்களை வைப்பதற்கு விஜய் ரசிகர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட வில்லை.
தங்களது பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரசிகர்கள் சார்பில் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீசார் உள்ளாட்சி நிர்வாகித்தினரும் அனுமதி மறுத்து வருவது தெரியவந்துள்ளது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் பேனர் வைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். விஜய் ரசிகர் ஒருவர், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட பார்வையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் போது குறுகிய காலமே வைக்கப்படும். பேனர்களுக்கு உரிய அனுமதியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுவதற்கும் அனுமதி கிடைப்பது இல்லை என்று விஜய் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே உள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க கொடியை அகற்றி விட்டு புதிய கொடியை ஏற்றுவதற்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் விஜய் படம் வெளியாகும் தியேட்டர்களில் திட்டமிட்டபடி பேனர்களை வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தியேட்டர்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
- விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.
மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்